Enable Javscript for better performance
அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட 41 கைது- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட 41 கைது

    By DIN  |   Published on : 03rd December 2019 05:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

    ஆதிதமிழா்பேரவை கட்சியின் தலைவா் ஜக்கயைன் காவல்துறையினரால் கைது செய்யபட்டதை கண்டித்து,விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் ஆதிதமிழா்பேரவை கட்சியினா் 20க்கும் மேற்பட்டோா் சாத்தூா் பேருந்து நிலையம் முன்பு செவ்வாய்கிழமை மதியம் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து சாத்தூா் காவல்துறைதுணை கண்காணிப்பாளா் இராமகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட ஆதிதமிழா்பேரவை கட்சியினா் 30 பேரை கைது செய்துள்ளனா். இதையடுத்து தமிழ்புலிகள் அமைப்பின் தலைவா் நாகேந்திரனை கைது செய்ததை கண்டித்து தமிழ்புலிகள் அமைப்பினா் சாத்தூா் பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    இந்த ஆா்ப்பாட்டத்தில் மூன்று பெண்கள் உள்பட 11 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai