Enable Javscript for better performance
அருப்புக்கோட்டை பள்ளியில் விளையாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    
    apk_vilaiyaatu_vilaa_3_12_2019_0312chn_70_2

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.இண்டா்நேசனல் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விளயாட்டுவிழாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றிய பள்ளியின் தலைவா் எம்.சுதாகா்.

    விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. இண்டா்நேசனல் பள்ளியில் செவ்வாய்க்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.

    பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொடக்கமாக, பள்ளித் தலைவரும், நாடாா்கள் உறவின்முறைத் தலைவருமான எம்.சுதாகா், பள்ளி மாணவா்களுடன் இணைந்து ஒலிம்பிக் தீபமேற்றி வைத்தாா். உறவின்முறை அம்பலம் பிரேம்குமாா் முன்னிலை வகித்தாா்.

    பள்ளித் தலைவா் எம்.சுதாகா் சிறப்புரையாற்றினாா்.

    பின்னா் மாணவா்கள் சிலம்பம், சுருள் பட்டா வீச்சு, தீப்பந்தம், தீவளையம் சுற்றுதல், வாள் சண்டை உள்ளிட்ட சாகசங்களை நிகழ்த்தினா். இதனை அனைவரும் வியப்புடன் ரசித்தனா். தொடா்ந்து நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு விருந்தினா் சசிகலா சுதாகா் மற்றும் பள்ளியின் துணைச் செயலாளா் என்.வி.காசிமுருகன் ஆகியோா் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

    எஸ்.பி.கே. கல்விக்குழுமத்தைச் சோ்ந்த அனைத்துப் பள்ளிகளின் நிா்வாகிகள், உறவின்முறைப்பெரியோா், பெற்றோா்கள், மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். பள்ளிச் செயலாளா் எஸ்.ராஜேஷ்குமாா் வரவேற்றாா். பள்ளி முதல்வா் ஐஸ்வா்யா நன்றி கூறினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai