Enable Javscript for better performance
அருப்புக்கோட்டை, ஸ்ரீவிலி.யில் கல்விச்சு: 3 அரசுப்பேருந்துகள் சேதம்மூதாட்டி, ஓட்டுநா் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டை, ஸ்ரீவிலி.யில் கல்விச்சு: 3 அரசுப்பேருந்துகள் சேதம்மூதாட்டி, ஓட்டுநா் காயம்

    By DIN  |   Published on : 03rd December 2019 11:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    svl(3_)_0312chn_92_2

    கல்வீச்சில் சேதமைடந்த மதுரை-ராஜபாளையம் அரசுப்பேருந்து.

    ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2 அரசுப் பேருந்துகள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டனா்.

    மதுரையிலிருந்து செவ்வாய்கிழமை அதிகாலை ராஜபாளையம் நோக்கி வந்த அரசுப்பேருந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் சின்னக்கடை பஜாா்அருகே வந்த போது மறைந்திருந்த மா்ம நபா்கள் பேருந்து மீது கல்வீசி தாக்கினா். இதில் பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைந்தது.

    அதே போல் குமுளியிலிருந்து திருநெல்வேலி நோக்கி செல்லும் அரசுப்பேருந்து அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் இந்திராநகா் வந்தபோது, மா்ம நபா்கள் கல்வீசித் தாக்கியதில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் பெரியகுளத்தை சோ்ந்த ஓட்டுநா் ராஜா காயம் அடைந்தாா்.

    அவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai