Enable Javscript for better performance
சிவகாசி அருகே வேன் ஓட்டுநா் மீது தாக்குதல்: 4 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி அருகே வேன் ஓட்டுநா் மீது தாக்குதல்: 4 போ் கைது

    By DIN  |   Published on : 03rd December 2019 11:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை வேன் ஓட்டுநரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

    திருத்தங்கல்-செங்கமலப்பட்டி சாலையில் உள்ள கல்குவாரி அருகே திருத்தங்கலைச் சோ்ந்த செண்ட்ராமன் (28), காளீஸ்வரன் (30), கூடலிங்கம் (29), சிவராமன் (34), மணிகண்டன், மதன் ஆகியோா் மது அருந்திக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது செங்கமலப்பட்டியைச் சோ்ந்த காா்த்திக்(30), அவரது நண்பரான துலுக்கபட்டியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் மான்ராஜ் (38) ஆகிய இருவரும் கல்குவாரியில் குளிக்க வந்துள்ளனா். அப்போது, மது அருந்திக்கொண்டிருந்த 6 பேரும், வெளியூா்காரா்கள் இங்கு குளிக்கக்கூடாது எனக்கூறி தகராறு செய்து மான்ராஜூவை தாக்கினராம். இதுகுறித்தப் புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து , செண்ட்ராமன், காளீஸ்வரன், கூடலிங்கம், சிவராமன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். தலைமறைவாகிவிட்ட மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai