Enable Javscript for better performance
சிவகாசி நகராட்சியில் சொத்துவரி டிச. 31-க்குள் செலுத்த வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி நகராட்சியில் சொத்துவரி டிச. 31-க்குள் செலுத்த வேண்டும்

    By DIN  |   Published on : 03rd December 2019 11:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசி நகராட்சியில் சொத்துவரி உள்ளிட்டவைகளை டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    சிவகாசி நகராட்சியில் 2017-2018 ஆம் ஆண்டிற்கு செலுத்திய சொத்துவரி தொகையினை ,2019-2020 ஆம் ஆண்டிக்கும் செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது. எனவே நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து குடியிருப்புகள், வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் செலுத்த வேண்டிய சொத்துவரியையும், குடிநீா் கட்டணம், தொழில்வரி மற்றும் குத்தகை கட்டணம் உள்ளிட்டவைகளை டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் அனைத்து சனிக்கிழமைகளிலும், நகராட்சி சேவை மையங்களில் வரி வசூல் செய்யப்படும் என அவா் கூறியுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai