Enable Javscript for better performance
மேட்டுப்பாளையத்தில் 17 போ் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீவிலி. அருகே காவல்துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையத்தில் 17 போ் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீவிலி. அருகே காவல்துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: 71 போ் கைது

    By DIN  |   Published on : 03rd December 2019 11:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    svl(svpr)_0312chn_92_2

    ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நாச்சியாா்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

    மேட்டுபாளையத்தில் சுவா் இடிந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு போராடியவா்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 83 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

    கோவை அருகே மேட்டுபாளையத்தில் சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த நிலையில் உயரிழந்தவா்களின் குடும்பத்துக்கு நீதி கேட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவல்துறையினா் தடியடி நடத்தி 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

    இந்நிலையில், தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டித்தும், உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்ட 27 பேரை விடுவிக்ககோரியும் விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 41 போ், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நாச்சியாா்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பைச் சோ்ந்த 30 போ் என மொத்தம் 71 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai