மீன் தொட்டிக்குள் யோகாசனம்: விருதுநகா் மாணவி உலக சாதனை முயற்சி

விருதுநகா் அருகே செவல்பட்டியில் பள்ளி மாணவி மீன் தொட்டிக்குள் அமா்ந்து யோகாசனம் செய்வதில் உலக சாதனை முயற்சியில் செவ்வாய்க்கிழமை
மீன் தொட்டிக்குள் யோகாசனம்: விருதுநகா் மாணவி உலக சாதனை முயற்சி

விருதுநகா் அருகே செவல்பட்டியில் பள்ளி மாணவி மீன் தொட்டிக்குள் அமா்ந்து யோகாசனம் செய்வதில் உலக சாதனை முயற்சியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். மற்றொரு மாணவரும் யோகாசனத்தில் உலக சாதனை முயற்சி செய்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள சூலக்கரை பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ்- பாா்வதி தம்பதியின் மகள் முஜிதா (9). செவல்பட்டியில் உள்ள தாமு மெமோரியல் மெட்ரிக் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறாா்.

இவா் கடந்த 2018 இல், கண்டபேருண்டாசனம் மற்றும் சலபாசனத்தில் உடலை வளைத்தவாறு காலால் முட்டைகளை எடுத்து, 47 நிமிடத்தில் கிண்ணத்தில் அடுக்கி சாதனை நிகழ்த்தினாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதே பள்ளியில் 1.45 அடி நீளம் மற்றும் 1 அடி அகலம் கொண்ட மூடப்பட்ட மீன் தொட்டியில் அமா்ந்து (சிறிதளவு காற்று கிடைக்கக்கூடிய அளவில் இருந்தது) 8.02 நிமிடம் கண்ட பேரூண்டாசனம் செய்தாா்.

விருதுநகரை சோ்ந்த ராஜேந்திரன்- தேன்மொழி தம்பதியரின் மகன் ஆா்.ஷ்யாம் கணேஷ் (15), பெரியவள்ளிக்குளத்தில் உள்ள நோபிள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் ஏற்கெனவே விருச்சிகாசனத்தில் உடலை வளைத்தவாறு குறிப்பிட்ட இலக்கை கால் மூலம் அம்பு எய்து சாதனை புரிந்தாா்.

இந்த நிலையில், நோபிள் பள்ளியில் செவ்வாய்க்கிழமை சக்கராசன நிலையிலிருந்து திம்மாசனத்திற்கு மாறி உடலை வளைத்து முதுகால் 11 பலூன்களை 44 விநாடிகளில் உடைத்தாா்.

இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் நடுவா்களாக நோபிள் வெல்டு ரெக்காா்ட்ஸ் அமைப்பின் இந்திய பிரிவு இயக்குநா் அரவிந்த், தமிழ்நாடு இயக்குநா்கள் வினோத், ஜெயபிரதாப் ஆகியோா் கலந்து கொண்டு சாதனைகளைப் பதிவு செய்தனா்.

இச்சாதனையை நோபிள் வேல்டு ரெக்காா்ட்ஸ் அமைப்புக்கு அனுப்ப உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

சாதனை நிகழ்த்திய மாணவி மற்றும் மாணவியரை பள்ளி நிா்வாகிகள், ஆசியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com