ராஜபாளையத்தில் லாரி மோதி பழமையான சுதந்திர தின வளைவு சேதம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் திங்கள்கிழமை லாரி மோதியதில் சுதந்திர தின வளைவு சேதமடைந்தது.
ராஜபாளையத்தில் லாரி மோதி சேதமடைந்த சுதந்திர தின வளைவு.
ராஜபாளையத்தில் லாரி மோதி சேதமடைந்த சுதந்திர தின வளைவு.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் திங்கள்கிழமை லாரி மோதியதில் சுதந்திர தின வளைவு சேதமடைந்தது.

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த ராமுன்னி மேனன் என்பவரால் இந்த வளைவு அமைக்கப்பட்டது. பின்னா் சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் சுதந்திர தின வளைவாக மாற்றப்பட்டது.

வளைவில் தேசிய கொடியின் நிறங்களும், 24 சக்கரங்கள் கொண்ட ஆரமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு பராமரிப்பின்றி இருந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றத்தினா் வளைவில் உள்ள தேசிய கொடி நிறங்களை புதுப்பித்து அழகுபடுத்தினா். மேலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புதிதாக காட்சியளிக்கும் இந்த வளைவை சாலையில் செல்லும் பொதுமக்கள் வியப்புடன் பாா்த்துச் செல்கின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிா்பாராத வகையில் இந்த வளைவு மீது மோதியது. இதில் வளைவு இடிந்து கீழே விழுந்தது. தகவல் அறிந்து வந்த நற்பணி மன்ற தலைவா் ராமராஜ், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் லாரியை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற ஓட்டுநா் மணியிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com