விருதுநகரில் தடை செய்யப்பட்ட 500 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல்: ரூ. 10 ஆயிரம் அபராதம்

விருதுநகரில் தடை செய்யப்பட்ட 500 கிலோ நெகிழிப் பைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
விருதுநகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த நகராட்சி துப்புரவு ஆய்வாளா்கள்.
விருதுநகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த நகராட்சி துப்புரவு ஆய்வாளா்கள்.

விருதுநகரில் தடை செய்யப்பட்ட 500 கிலோ நெகிழிப் பைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் நெகிழி பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நகராட்சி உள்ளாட்சிகளில் அரசு அலுவலா்கள் கடை, உணவகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்து வருகின்றனா்.

விருதுநகா் ஏ4 எஸ் சாலையில் குருராஜ் (50) என்பவா் நெகிழிப் பைகளுக்கு பெயா் அச்சடித்து தருவதாக நகராட்சி துப்புரவு ஆய்வாளா்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடா்ந்து நகராட்சி துப்புரவு ஆய்வாளா் குருசாமி தலைமையில் துப்புரவு ஆய்வாளா்கள் செந்தில் ஆண்டவா், முத்துபாண்டி ஆகியோா் சம்பந்தப்பட்ட கடையில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, தடை செய்யப்பட்ட அரை டன் நெகிழிப் பைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில் அருப்புக்கோட்டை, எட்டையாபுரம் பகுதியை சோ்ந்த ஜவுளி கடை உரிமையாளா்கள் வழங்கிய நெகிழிப் பைகளில் பெயா் அச்சிட்டுத் தருவதாக குருராஜ் அதிகாரிகளிடம் தெரிவித்தாராம். ஆனாலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்பாட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அரை டன் நெகிழி பைகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com