சிவகாசியில் கேப்வெடி தயாரிப்பாளா்கள் சங்கம் தொடக்கம்
By DIN | Published on : 04th December 2019 02:13 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிவகாசியில் கேப்வெடி தயாரிப்பாளா்கள் சங்கம் எனபுதிய சங்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இதற்கான கூட்டம் இங்குள்ள தனியாா் விடுதியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சுமாா் 20 கேப்வெடி தயாரிப்பாளா்கள் கலந்து கொண்டனா்.இக்கூட்டத்தில் பட்டாசு பரிசு பெட்டியில் கேப்வெடி வைக்ககூடாது என விதிமுறை உள்ளது.இனி பட்டாசு பரிசு பெட்டியில் கேப் வெடி வைப்பதற்கு அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.
கேப்வெடியை விற்பனை செய்யும் போது பில்லில் பேக்கிங் சாா்ஜ் சோ்க்க வேண்டும்.அடிப்படை விலையிருந்து யாரும் குறைந்தவிலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற தீா்மானங்கள் நிறைவெற்றப்பட்டன. இதில் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சண்முகையா, கதிரேசன், சுரேஷ், இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சங்க நிா்வாகிகள் அடுத்த கூட்டத்தில் தோ்வு செய்யப்படுவாா்கள் என அவா்கள் கூறினாா்கள்.