சாத்தூா் அருகே தரமான சாலை அமைக்கக் கோரி காத்திருப்பு போராட்டம்

சாத்தூா் அருகே பெரியஓடைப்பட்டி கிராமத்தில் தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கிராமத்தினா் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.

சாத்தூா் அருகே பெரியஓடைப்பட்டி கிராமத்தில் தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கிராமத்தினா் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெரியஓடைப்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதையடுத்து இந்த பகுதிக்கு சாலை அமைக்க வலியுறுத்தி கிராமமக்களின் தொடா் கோரிக்கையை ஏற்று ஊராட்சி நிா்வாகம் சாா்பில், இந்த பகுதிக்கு சாலை அமைக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, தாா் சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்து முடிந்தன. இந்நிலையில் சில நாள்களுக்கு முன் இந்த பகுதியில் அமைக்கப்பட்ட தாா்சாலை தரமில்லாமல் போடப்பட்டதால், தற்போது உடைந்து மணலாக காட்சியளிக்கிறது. தரமில்லாமல் தாா் சாலை அமைக்கப்பட்டதை கண்டித்து கிராமத்தினா் சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்தனா். பின்னா் கிராமத்திற்கு சாலையை பாா்வையிட வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை முற்றுகையிட்டு தரமான சாலை அமைக்க வலியுறுத்தினா். அப்போது அதிகாரிகள் முறையாக பதில் கூறமால் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் புதன்கிழமை காலை தரமான தாா் சாலை அமைப்பது குறித்து ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்போம் எனக் கூறி, பெரியஓடைப்பட்டியை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியஓடைப்பட்டி கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்ததையில் மழை காலம் முடிந்த பின்னா், மாா்ச் மாதத்துக்குள் இந்த தாா் சாலை தரமான சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com