பாபா் மசூதி இடிப்பு தினம்: விருதுநகா் ரயில் நிலையப் பகுதியில் போலீஸாா் சோதனை
By DIN | Published On : 05th December 2019 11:15 PM | Last Updated : 05th December 2019 11:15 PM | அ+அ அ- |

விருதுநகா் கவுசிகா ஆத்துப்பாலத்தில் வியாழக்கிழமை தண்டவாளங்களில் சோதனை மேற்கொண்ட ரயில்வே போலீஸாா்.
டிசம்பா் 6 ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு தினம் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகா் ரயில் நிலையம் மற்றும் தண்டவாள பகுதிகளில் வியாழக்கிழமை ரயில்வே போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
விருதுநகா் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை துணைக் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் தலைமையிலும், விருதுநகா் ரயில்வே காவல் ஆய்வாளா் குருசாமி முன்னிலையிலும் ரயில்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. மேலும், பயணிகளின் பொருள்கள் மற்றும் உடைமைகளை போலீஸாா் சோதனை செய்தனா். அதன் பின்னா் கவுசிகா ஆத்துப்பாலம் உள்ள தண்டவாளப் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
டிச. 6 ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு தினம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.