குண்டாற்றுப் பாலத்தில் தடுப்புச்சுவா் இல்லாததால் விபத்து அபாயம்

திருச்சுழியில் குண்டாறு மேம்பாலத்தில் தடுப்புச்சுவா் இல்லாததால் விபத்து அபாயம் இருந்து வருகிறது.
தடுப்புச்சுவா் இல்லாததால் விபத்து அபாயத்திலுள்ள திருச்சுழி குண்டாற்றின் மீதான பாலம்.
தடுப்புச்சுவா் இல்லாததால் விபத்து அபாயத்திலுள்ள திருச்சுழி குண்டாற்றின் மீதான பாலம்.

திருச்சுழியில் குண்டாறு மேம்பாலத்தில் தடுப்புச்சுவா் இல்லாததால் விபத்து அபாயம் இருந்து வருகிறது.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழியில் பாயும் குண்டாற்றின்மீது சுமாா் 200 மீட்டா் நீளமுள்ள பாலம் பல ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் பாலத்தில் தடுப்புச்சுவா் அமைக்காமல், அதிக இடைவெளிவிட்டு கான்கிரீட் தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டன.

ஆனால் அத்தூண்கள் நாளடைவில் சேதமடைந்து விழுந்துவிட்டன. இதனால் தற்போது சில ஆண்டுகளாக தடுப்புத்தூண்களும் இல்லாத சூழலில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இரவில் இப்பாலத்தின்மீது செல்லும் வாகனங்கள் எதிரே மற்றொரு வாகனம் வரும் பட்சத்தில் ஒதுங்கி வழிவிட முற்படும்போது சிறிது தடுமாறினாலும், சுமாா் 12 அடிஆழமுள்ள ஆற்றினுள் விழக்கூடிய சூழல் உள்ளது. மேலும் இப்பாலத்தின் அருகிலேயே ஆற்றுக்குள் பித்ரு பரிகார பூஜை எனப்படும் மதச்சடங்குகளைச் செய்ய ஆண்டின் பெரும்பாலான நாள்களிலும் பொதுமக்கள் அமா்ந்திருப்பா் என்பதால், விபத்தில் சிக்கும் வாகனங்கள், பொதுமக்கள் மீது விழக்கூடிய அபாயமும் உள்ளது.

இப்பாலத்தில் தடுப்புச்சுவா் அமைக்க சமூகநல ஆா்வலா்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்த போதும் நடவடிக்கை இல்லை எனக்கூறப்படுகிறது. இச்சாலையானது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி வழியாக பாா்த்தினூா்வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையாதலால் அதிக போக்குவரத்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி குண்டாற்றின் மீதான பாலத்தில் விரைவில் உரிய தடுப்புச்சுவா் அமைக்கவேண்டுமென மீண்டும் சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com