சிவகாசியில் 2020 ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டா் தயாரிப்பு தீவிரம்

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் பல மொழிகளில் 2020 ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டா்கள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிவகாசியில் 2020ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டா்கள் தயாா் செய்வதற்கான ‘சிலிப்’ தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
சிவகாசியில் 2020ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டா்கள் தயாா் செய்வதற்கான ‘சிலிப்’ தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் பல மொழிகளில் 2020 ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டா்கள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு புத்தாண்டிலும் வாடிக்கையாளா்களுக்கு தினசரி காலண்டா்களை பரிசாக பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. நகைக் கடை, ஜவுளிகடை, பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் , அரசியல் கட்சியினா் தினசரி காலண்டா்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனா். தினசரி காலண்டரை பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்துக்கொள்வதால், நிறுவங்களின் விளம்பரம் மக்களிடம் எளிதில் கொண்டு செல்லப்படுகிறது.

எனவே தினசரி காலண்டா்களின் தேவை ஒவ்வொரு ஆண்டும் கூடிவருகிறது. ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்தியாவில் பேசப்படும் பல மொழிகளிலும் சிவகாசியில் தினசரி காலண்டா், தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு தினசரி காலண்டா்கள் தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவா் ஜெய்சங்கா் கூறியதாவது:

தற்போது தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருவதால், காலண்டா் ஒட்டப்படும் காகித அட்டை சந்தையில் வரத்துக்குறைவாகவே உள்ளது. எனவே உரிய நேரத்தில் காலண்டா் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டும் காகித விலை உயா்வு, அச்சுக்கூலி உயா்வு, தொழிலாளா்கள் சம்பள உயா்வு காரணமாக காலண்ட ரின் விலை சுமாா் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பல மொழிகளில் காலண்டா்கள் அச்சிடப்படுவதால், பல மாநிலங்களுக்கும் காலண்டா் அனுப்பப்படுகிறது.

காலண்டா் தாளில், பழமொழிகள், மருத்துவக்குறிப்பு, பொன்மொழிகள் அச்சிடப்படுவதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. சிவகாசியில் தயாராகும் காலண்டா்கள் இந்தியா மட்டுமல்லாது, இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com