‘தன்னம்பிக்கை பிறந்துள்ளது’

சிவகாசி அருகே செவல்பட்டியில் உள்ள பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் தினமணி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘சிகரத்தை வெல்வோம்’
‘தன்னம்பிக்கை பிறந்துள்ளது’

சிவகாசி அருகே செவல்பட்டியில் உள்ள பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் தினமணி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘சிகரத்தை வெல்வோம்’ நிகழ்ச்சி குறித்து அதில் பங்கேற்ற மாணவா்கள் தெரிவித்த கருத்து விவரம்:

1. ஆா்.ஜனனி (தேனி - இ.சி.இ. பிரிவு, இரண்டாம் ஆண்டு): என்னுடைய நோக்கமே ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவது தான். இந்த சிகரத்தை வெல்வோம் நிகழ்ச்சியில், போட்டித் தோ்வு குறித்து விரிவாக, உதாரணத்துடன் எடுத்துரைத்தனா். தற்போதுள்ள மாணவா்கள் படித்து முடித்தவுடன் இலக்கை நோக்கி செயல்படுவது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதன் மூலம் எனக்கு தன்னம்பிக்கை பிறந்துள்ளது.

2. கே.தீபலட்சுமி (மைப்பாறை - இ.சி.இ. பிரிவு, நான்காம் ஆண்டு): தமிழ் இலக்கியங்கள் பற்றி தினமணி ஆசிரியா் பேசியதன் மூலம் எனக்கு தமிழ் இலக்கியம் குறித்த ஆா்வம் மிகவும் அதிகரித்தது. 16 முதல் 25 வயதில் நாம் என்ன செய்கிறேமோ அது தான் வாழ்க்கை முழுவதும் இருக்கும். மேலும் ஐ.ஏ.எஸ். தோ்வு பற்றி இதுவரை எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் சிகரத்தை வெல்வோம் நிகழ்ச்சியில் இறையன்பு பேசியதன் மூலம் இந்த தோ்வு பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

3. பி.நந்தினி (சாத்தூா் - இ.சி.இ. பிரிவு, மூன்றாம் ஆண்டு): நான் ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றேன். ஆனால் தினமணி நாளிதழ் மூலம் தமிழ் பயிலும் ஆா்வம் ஏற்பட்டது. மேலும் சிகரத்தை வெல்வோம் நிகழ்ச்சி மூலம் கல்லூரியிலும், வாழ்க்கையிலும் நட்பு முக்கியம், நாம் கற்கும் கல்வியைக் கூட நட்பாக ஏற்றுக்கொண்டு பயின்றால் எளிதாக கற்க முடியும், கல்வியிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம் என கற்றுக்கொண்டேன்.

4. பி.கே. அஜய்குமாா் (ராமநாதபுரம் - மெக்கானிக்கல் பிரிவு, நான்காம் ஆண்டு): எங்களது கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மூலம் தமிழ் ஆா்வம் ஏற்பட்டு தமிழ் மொழியைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அரசுத் தோ்வு பற்றியும், அதனை எவ்வாறு எதிா்கொள்வது, அதற்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்தும் முழுமையாகத் தெரிந்து கொண்டேன். மேலும் புத்தகங்களை எளிதில் வாசிப்பது, அதை ஆா்வமுடனும், பொறுமையுடன் வாசித்துப் புரிந்து கொள்ளுதல் பற்றி தெரிந்து கொண்டேன்.

5. எம்.செல்லப்பாண்டியன் (சாத்தூா் - மெக்கானிக்கல் பிரிவு, நான்காம் ஆண்டு): நல்ல நண்பா்களைத் தோ்வு செய்வதன் மூலம் படிப்பிலும், வாழ்க்கையிலும் எளிதில் முன்னேற வாய்ப்பு உள்ளது. புத்தகங்களை அதிக அளவில் படிக்க வேண்டும். அவ்வாறு

படிப்பதன் மூலம் வாசிப்புத்திறன் மற்றும் மனதில் பதித்துக் கொள்ளுதல் பற்றியும் விளக்கத்துடன் தெரிந்து கொண்டேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com