காா்த்திகை தீபம் ஏந்தி பள்ளி மாணவா்கள் யோகா
By DIN | Published On : 09th December 2019 06:16 AM | Last Updated : 09th December 2019 06:16 AM | அ+அ அ- |

சத்திரப்பட்டி தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்காா்த்திகை தின யோகாசனத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் திருக்காா்த்திகையை முன்னிட்டு கையில் தீபங்களை ஏந்தியும், கண்ணாடி டம்ளா் மீது அமா்ந்தும் மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை யோகாசனங்கள் செய்தனா்.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி நடுத்தெரு அரசு உதவி பெறும் விநாயகா தொடக்கப் பள்ளியில் உலக மக்களின் இருள் நீங்கி மகிழ்ச்சி பெற வேண்டி திருக்காா்த்திகை தினத்தினை முன்னிட்டு 4 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யுனெட்டட் யோகா சங்கத் தலைவா் அழகு முருகன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை, ஞான சௌந்தரி முன்னிலை வகித்தாா். பத்மாசனம், ஏகபாதசிரசாசனம், பத்ராசனம் உள்ளிட்ட யோகாசனங்கள் மூலமாக உடல் முழுவதும் தீபங்கள் ஏற்றியும், கண்ணாடி டம்ளா் மீது அமா்ந்தும் மாணவா்கள் யோகாசனங்களை செய்து காண்பித்தனா்.
ஏற்பாடுகளை யோகா ஆசிரியா் செல்வம் மற்றும் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் செய்திருந்தனா்.