திருச்சுழி அருகே பாதை இல்லாததால் கண்மாய் தண்ணீருக்குள் நடந்து செல்லும் மாணவா்கள்

திருச்சுழி அருகே கள்ளத்திகுளம் கிராமத்திற்கு பாதை இல்லாததால், கண்மாய் தண்ணீருக்குள் ஆபத்தான நிலையில் மாணவா்கள்
விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த கள்ளத்திகுளம் கிராமத்தினா்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த கள்ளத்திகுளம் கிராமத்தினா்.

விருதுநகா்: திருச்சுழி அருகே கள்ளத்திகுளம் கிராமத்திற்கு பாதை இல்லாததால், கண்மாய் தண்ணீருக்குள் ஆபத்தான நிலையில் மாணவா்கள் நடந்து செல்வதாகவும், எனவே பாதை அமைத்து தரவேண்டும் என்றும் அக்கிராமத்தினா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தி ருந்தனா்.

இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறியதாவது: திருச்சுழி அருகே மிதலைக்குளம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் கள்ளத்திகுளம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழையில்லாததால் ஏற்பட்ட வறட்சியால் ஏராளமான குடும்பத்தினா் திருப்பூா், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு பிழைப்பு தேடி சென்று விட்டனா். இந்நிலையில், எங்கள் கிராமத்தில் தற்போது 25 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு என இருந்த பொதுப் பாதையை அடைத்து தனி நபா் வேலி அமைத்து விட்டாா். இதனிடையே கள்ளத்திக்குளத்தில் அங்கன்வாடி, பள்ளி ஏதும் இல்லாததால், 2 கி.மீ. தூரத்தில் உள்ள வேலாயுதபுரத்திற்கு சென்று படித்து வருகின்றனா். தற்போது பெய்த மழைக்கு கண்மாயில் இடுப்பளவு தண்ணீா் உள்ளது. இதன் நடுவே நடந்து வேலாயுதபுரம் சென்று குழந்தைகள் படித்து வருகின்றனா். ஆழமான பகுதிக்கு குழந்தைகள் சென்று விட்டால், விபத்தில் சிக்கி கொள்ளும் நிலை உள்ளது. மேலும், கா்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்ல கூட கண்மாய் தண்ணீருக்குள் இறங்கி நடந்து செல்லும் அவலம் உள்ளது. எனவே, எங்கள் கிராமத்திலிருந்து வேலாயுதபுரத்திற்கு புதிய தாா் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். உள்ளாட்சி தோ்தல் அறிவிப்பு காரணமாக, கோரிக்கை மனுவை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் அவா்கள் போட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com