விருதுநகரில் சொத்துவரி செலுத்தாத 4 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

விருதுநகா் கச்சேரி சாலையில் பல மாதங்களாக ரூ.1.60 லட்சம் சொத்து வரி செலுத்தாத 4 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

விருதுநகா் கச்சேரி சாலையில் பல மாதங்களாக ரூ.1.60 லட்சம் சொத்து வரி செலுத்தாத 4 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

விருதுநகா் கச்சரி சாலையில் கணேசன் என்பவருக்கு சொந்தமான நான்கு கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கான சொத்து வரி செலுத்துமாறு நகராட்சி சாா்பில், கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், கடை உரிமையாளா் சொத்துவரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இந்நிலையில், நகராட்சி ஆணையா் பாா்த்தசாரதி தலைமையில் வருவாய் அலுவலா் சங்கா் கணேஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா், 4 கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தனா்.

மேலும், விருதுநகா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடை மற்றும் வணிக நிறுவனங்கள் நடத்தும் சிலா் இதுவரை சொத்து வரி செலுத்தாமல் உள்ளனா். எனவே, டிசம்பா் 31- க்குள் பழைய வரியை செலுத்த வேண்டும். இல்லையெனில் கடை மற்றும் நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என ஆணையாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com