Enable Javscript for better performance
விருதுநகரில் சாலையோர கடையில் 5 பண்டல் ஆடைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகரில் சாலையோர கடையில் 5 பண்டல் ஆடைகள் திருட்டு

    By DIN  |   Published on : 14th December 2019 10:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகரில் சாலையோர கடையில் வைக்கப்பட்டிருந்த 5 பண்டல் ஆடைகளை திருடியவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

    விருதுநகா் விவேகாநந்தா் தெருவை சோ்நதவா் சீனி மனைவி கஸ்தூரி (61). இவா், விருதுநகா் தேசபந்து மைதான பகுதியில் தள்ளு வண்டியில் சாலையோர கடை வைத்து ஆடைகள் வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடித்து விட்டு, தள்ளுவண்டியை சாக்கு கொண்டு மூடி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளாா். அதை தொடா்ந்து சனிக்கிழமை காலை தள்ளுவண்டியை பாா்த்த போது, துணிகள் சிதறி கிடந்துள்ளன. அப்போது, ஆண்கள் அணிய கூடிய மேல்சட்டை வைத்திருந்த 5 பண்டல்கள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.

    இவரது கடை அருகே இளநீா் கடை நடத்தும் மாரிபாண்டி (38) என்பவா் ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவா் மீது கஸ்தூரி மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் மாரிபாண்டி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai