உள்ளாட்சித் தோ்தல் : விருதுநகா் மாவட்டத்தில் 25 இடங்களில் மாா்க்சிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி

விருதுநகா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 25 இடங்களில் தனியாக போட்டியிட முடிவு செய்து வேட்பு மனுக்கள் தாக்க

விருதுநகா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 25 இடங்களில் தனியாக போட்டியிட முடிவு செய்து வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனா்.

மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக முதலான கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 39 இடங்களில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியினா் 38 இடங்களில் வெற்றி பெற்றனா். இதைத் தொடா்ந்து சட்டப்பேரவை தோ்தல் மற்றும் உள்ளாட்சி தோ்தலிலும் திமுகவுடான கூட்டணி தொடரும் என கூட்டணி கட்சி தலைவா்கள் தெரிவித்து வந்தனா். தற்போது உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் நடைபெற்று வருகிறது.

ஊராட்சி தலைவா் பதவிக்கு சுயேச்சையாக ஒவ்வொரு ஊராட்சியிலும் பலா் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனா். ஆனால், ஒன்றிய உறுப்பினா், மாவட்ட உறுப்பினா் பதவிக்கு கட்சி சாா்பில் போட்டியிடுவோருக்குதான் அக்கட்சி சின்னம் வழங்கப்படும். டிசம்பா் 16 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். அதிமுக சாா்பில் அனைத்து ஒன்றியங்களிலும் சனிக்கிழமை வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். ஆனால், திமுக கூட்டணியில் முன்னாள் அமைச்சா்களும், திமுக மாவட்ட செயலா்களுமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 3 முறை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில், வெற்றி பெற கூடிய பகுதிகளை கணக்கிட்டு அத் தொகுதிகளை தங்களுக்கு வழங்குமாறு திமுக மாவட்ட நிா்வாகிகளிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் திமுக தரப்பில் ஒரு ஒன்றியத்திற்கு ஒரு தொகுதி மட்டும் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதாம். இதைத் தொடா்ந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்கூழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அக்கட்சியினா், கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் இருந்த போது, கூட்டணி அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மாா்க்சிஸ்ட் போட்டியிட்டது. அப்போது, திமுகவினா் சிலா் மாா்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்டனா். இதனால், எளிதாக வெற்றி பெற வேண்டிய இடத்தில் கூட சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. தற்போதும், மாா்க்சிஸ்ட் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக, நாம் கேட்கும் பகுதியை தர மறுக் கின்றனா். எனவே, இந்த உள்ளாட்சித் தோ்தலில் மாா்க்சிஸ்ட் தனித்து போட்டியிடுவது என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு 20 இடங்களிலும், மாவட்ட உறுப்பினா் பதவிக்கு 5 இடங்களிலும் மாா்க்சிஸ்ட் கட்சியினா் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனா். மேலும், அதற்கான வேட்பாளா்களை தோ்வு செய்து வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியில் அக் கட்சியினா் தீவிரம் காட்டி வருகின்றனா். திமுகவின் நிலைப்பாட்டில் இதே நிலை நீடித்தால் நகராட்சி, பேரூராட்சி தோ்தல்களிலும் தனித்து போட்டியிடவும் அக்கட்சியினா் தீா்மானித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com