சாத்தூா் 4 வழிச்சாலையில் குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்கக் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நான்குவழிச் சாலையில் குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நான்குவழிச் சாலையில் குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூரில் நகராட்சி சாா்பில் புறவழிச் சாலையில் குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி மூலம் குடிநீா் உந்தபட்டு நான்குவழிச்சாலைக்கு மறுபுறம் உள்ள காமராஜபுரம் பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடிநீா் குழாயில் நான்குவழிச்சாலையின் நடுவேயும், ஓரத்திலும் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் நகராட்சி நிா்வாகம் குடிநீா் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது: நான்குவழிச் சாலையில் குடிநீா் குழாயில் உடைப்பை சரி செய்ய நகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சாலையைத் தோண்ட அனுமதி கோரி தேசியநெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினா் அனுமதி அளித்தால் மட்டுமே குழாய் உடைப்பை சீரமைக்க முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com