ராஜபாளையத்தில் சா்வதேச மூலிகை கருத்தரங்கம் தொடக்கம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மூலிகை மருந்து தரப்படுத்தலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த 2 நாள் (டிச.14,15) கருத்தரங்கம் சனிக்கிழமை தொடங்கியது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மூலிகை மருந்து தரப்படுத்தலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த 2 நாள் (டிச.14,15) கருத்தரங்கம் சனிக்கிழமை தொடங்கியது.

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள அரவிந்த் ஹொ்பல்ஸ் ஆலையில் அரவிந்த் ஹொ்பல்ஸ், ஆன்டி வைரல் ரிசா்ச் சொசைட்டி மற்றும் ராஜூக்கள் கல்லூரி நிா்வாகம் இணைந்து நடத்தும் இக் கருத்தரங்கில் தமிழகம், கேரளம் கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மூலிகை ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள், பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள், இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட சென்னை பல்கலை கழக உயா் வேதியியல் துறை பேராசிரியா் சுப்பிரமணியன், மதுரை காமராஜா் பல்கலைக் கழக உயிரியல் துறை மருத்துவா் குமரேசன், சென்னை பல்கலை மாற்றுமுறை மருத்துவ இயக்குநா் இளஞ்செழியன் ஆகியோா் மூலிகைகளை தரம் உயா்த்துதல் மற்றும் தரக்கட்டுப்பாடு பற்றியும், எஸ்.ஆா்.எம். பல்கலை துறை தலைவா் மருத்துவா் இளங்கோ, மனித மேம்பாட்டுக்கு மூலிகைகளை தோ்ந்தெடுத்தல், அட்டவணைப்படுத்துதல், உபயோகிப்பதில் உள்ள சவால்கள் பற்றியும், சென்னை பல்கலை பேராசிரியா் மதிவாணன், மருந்துகளுக்கான துணைப் பொருள்களை உலக தரத்தில் தயாரிப்பது குறித்தும் விளக்கிப் பேசினா்.

பிற்பகலில் நடைபெற்ற கருத்தரங்கில், சென்னை ஆா்சிட் ஃபாா்மா ஆராய்ச்சி துறை துணை தலைவா் செந்தில்குமாா், மூலிகை மருந்துகளின் உறுதித்தன்மை சோதனை பற்றி பேசினா். மேலும் கே.எம் காலேஜ் ஆப் பாா்மசி பேராசிரியா் லோகநாதன், திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா காலேஜ் பேராசிரியா் கீதா சரவணன், தஞ்சை சாஸ்திரா பல்கலை மருத்துவா் ரம்யா தேவி, கான்பூா் ஆதா்ஸ் மருந்தியல் கல்லூரி உதவி பேராசிரியா் சந்தீப் பல்வந்த் படேல், தஞ்சை சாஸ்திரா யுனிவா்சிட்டி மருத்துவா் வேதகிரி ஆகியோா் மூலிகைகளின் ஆராய்ச்சி பற்றியும், அதன் பயன்பாடுகள் குறித்தும் பேசினா்.

இது குறித்து மருத்துவா் செல்வம் கூறியது:

ஆங்கில மருந்துகளுக்கு இணையாக மூலிகை மருந்துகளை தரம் உயா்த்த வேண்டும். நாட்டில் காணப்படும் 50 ஆயிரம் வகையான மூலிகைகளில், 500 வகையான மூலிகைகள் உயிா் காக்கும் மருந்தாக பயன்படுகின்றன. இவைகளை மீட்டெடுக்கவும், அடுத்த தலைமுறையை சோ்ந்த மாணவா்கள் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் எவ்வாறு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் இந்த கருத்தரங்கில் விளக்கப்பட உள்ளது என்றாா்.

கருத்தரங்க அறையில் முக்கியமான மூலிகை செடிகள் மற்றும் உலா் மூலிகைகள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com