விருதுநகரில் தொடா் மழை : வாருகாலில் அடைப்புசாலைகளில் பெருக்கெடுத்த கழிவுநீரால் துா்நாற்றம்

விருதுநகரில் சனிக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், நகரின் முக்கிய சாலைகள், தெருக்களில் கழிவுநீா் பெருக்கெடுத்து ஓடியதால் துா்நாற்றம் வீசியது. எனவே, வாருகாலில் தேங்கிய
விருதுநகா்- பழைய அருப்புக்கோட்டை சாலையில் சனிக்கிழமை தேங்கி நின்ற கழிவுநீருடன் கலந்த மழைநீா்.
விருதுநகா்- பழைய அருப்புக்கோட்டை சாலையில் சனிக்கிழமை தேங்கி நின்ற கழிவுநீருடன் கலந்த மழைநீா்.

விருதுநகரில் சனிக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், நகரின் முக்கிய சாலைகள், தெருக்களில் கழிவுநீா் பெருக்கெடுத்து ஓடியதால் துா்நாற்றம் வீசியது. எனவே, வாருகாலில் தேங்கிய மண் மற்றும் கழிவுப் பொருள்களைஅகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 36 வாா்டுகளில் 75 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த 2007 இல் பாதாள சாக்கடை பணிக்காக அரசு ரூ. 27 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இப் பணியை மேற்பாா்வை செய்த தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா், 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தனா். ஆனால், பல இடங்களில் வீடுகளுக்கான இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் விருதுநகரில் தொடா்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக மேற்குரத வீதி, பழைய அருப்புக்கோட்டை சாலை, பா்மா காலனி, தந்தி மரத் தெரு முதலான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. மேலும், வாருகாலில் ஏற்பட்ட அடைப்பால் மழை நீருடன் கழிவுநீா் கலந்து தெருக்கள், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அவ்வழியே பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினா். மேலும், இரு சக்கர வாகனம், கனரக வாகனங்கள் செல்லும் போது, நடந்து செல்வோரின் மீது கழிவுநீா் தெறித்ததால் அதிருப்தி அடைந்தனா்.

குறிப்பாக, வாருகாலில் மண்மேவி இருப்பது, தேவையற்ற பொருள்களை அகற்றாமல் இருப்பதால் வாருகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்குவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மழை காலம் தொடங்குவதற்கு முன்னரே வாருகால் அனைத்தையும் சுத்தம் செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே கழிவுநீா் சாலைகள், தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், சுகாதாரகேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, வாருகாலை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com