வெளிநாடு வேலைக்கு செல்வோருக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி முகாம்

ராஜபாளையம் மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் விருதுநகா் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில், வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வோா் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு

ராஜபாளையம் மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் விருதுநகா் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில், வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வோா் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி முகாமில் 350 -க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் கிருஷ்ணமூா்த்தி ராஜா தலைமை வகித்தாா். ராஜபாளையம் வட்டாட்சியா் ஆனந்தராஜ் முகாமை தொடக்கி வைத்தாா்.

அருப்புக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் ரமணன், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவா்கள் மத்தியில் பேசினாா். நிகழ்ச்சியில் என்.ஏ.ஆா்.கல்லூரி நிறுவனங்களின் இயக்குநா் சுப்பையா பாண்டியன், வருவாய் ஆய்வாளா் முத்துராமலிங்கம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா். பொறுப்பு முதல்வா் அகஸ்தின் ஜோதிமணி வரவேற்றாா். மெக்கானிக்கல் துறை தலைவா் கஜேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com