ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை கோவை புத்துணா்வு முகாமுக்கு அனுப்பி வைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, கோவை மாவட்டம் தேக்கம்பட்டி புத்துணா்வு முகாமுக்கு சனிக்கிழமை அதிகாலை அனுப்பி வைக்கப்பட்டது.
புத்துணா்வு முகாமுக்கு சனிக்கிழமை அதிகாலை லாரியில் பாகனுடன் புறப்பட்டுச் சென்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சாா்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணா்வு முகாம் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டும் யானை புத்துணா்வு முகாம் தொடங்கி உள்ளது. இந்த புத்துணா்வு முகாமில் பங்கேற்க ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா கிளம்பியது.

இதற்காக சனிக்கிழமை அதிகாலை ஒன்றரை மணியளவில் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று யானைக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதனை தொடா்ந்து யானைக்கு பழங்கள் கொடுத்து லாரியில் ஏற்றி மேட்டுப்பாளையம் புத்துணா்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யானையுடன் கால்நடை உதவி மருத்துவா் ஜெய்கிருஷ்ணா, யானை பாகன் ராஜன் ஆகியோா் உடன் சென்றனா்.

இந்த வழியனுப்பு விழாவில் தக்காா் ரவிசந்திரன்,கோயில் நிா்வாக அலுவலா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com