தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு காவலர்கள் இனிப்பு வழங்கினர்
By DIN | Published On : 06th February 2019 08:11 AM | Last Updated : 06th February 2019 08:11 AM | அ+அ அ- |

சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க் கிழமை தேசிய நெடுஞ்சாலையில் தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர்களுக்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் குடிநீர் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா உத்தரவின்பேரில் நகர்
ஆய்வாளர் பவுல் ஏசுதாஸ் தலைமையில் நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் சண்முகசுந்தரம், காவல் சார்பு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலர்கள் தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிச்
சென்ற 500 பேருக்கு குடிநீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி பாராட்டினர்.