சுடச்சுட

  

  திரைப்படத்திற்கு சாதி பெயரை சூட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 12th February 2019 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kuravan12

  திரைப்படத்திற்கு "குறவன்' என்ற பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் பழங்குடி குறவன் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதன் மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார்.

  ஆர்ப்பாட்டத்தில், அரசு ஆவணங்களில் "நரிக்குறவன்' என்ற பெயருக்கு மாற்றாக "வாக்கிரி' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். எங்கள் இனப் பெயரை திரைப்படங்களில் தவறாக சித்தரிப்பதை தடுக்க வேண்டும். மேலும் "குறவன்' என்ற பெயரில் உருவாக்கப்படும் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். 2012 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ள கோரிக்கையான, குறவர்களான எங்களை "மலைக்குறவன்' என பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இது 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதால், எங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், எங்களது சமுதாய மக்களுக்கு அரசு அளிக்கும் உதவிகளையும் பெற முடியவில்லை. இதனால், எங்களது முன்னேற்றம் தடைபட்டுள்ளது. எனவே, இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

  இதைத் தொடர்ந்து, கோரிக்கை தொடர்பான மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் கோ. உதயகுமாரிடம் வழங்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai