சுடச்சுட

  

  ராஜபாளையம், திருவள்ளுவர் மன்றம் நடத்திய மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மூன்றாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
  ராஜபாளையம், திருவள்ளுவர் மன்றம் சார்பில் கடந்த வாரம் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் இக் கல்லூரி வேதியியல் துறை மாணவி மு.செல்வப்பிரியா கட்டுரைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். இவருக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பரிசு வழங்கினார்.
  மாணவிக்கு கல்லூரியில் திங்கள்கிழமை பாராட்டு விழா கல்லூரி இயக்குநர் டாக்டர் ரா.சபரிமாலா தலைமையில் நடைபெற்றது. கல்விக் குழுமத்தின் தலைவர் வி.பி.எம்.சங்கர் மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
  நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ச.செந்தாமரைலட்சுமி மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai