சுடச்சுட

  

  விருதுநகர் அருகே மீசலூரில் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு விண்ணப்பம்  வழங்க மறுப்பு: பொதுமக்கள் முற்றுகை

  By DIN  |   Published on : 12th February 2019 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் அருகே மீசலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி பொது பிரிவினருக்கான நிர்வாக உறுப்பினர் தேர்தலுக்கு விண்ணப்பம் வழங்க மறுத்ததால், திங்கள்கிழமை பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
   விருதுநகர் அருகே மீசலூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்ளது. இதற்கான தலைவர், துணை தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு கடந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. 
         இதில், பொது பிரிவில் நிர்வாக உறுப்பினர் தேர்வு முறையாக நடைபெற வில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இதை யடுத்து, ஏற்கெனவே நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து, புதிதாக தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை பொது பிரிவினருக்கான தேர்வுக்கு விண்ணப்பம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படு கிறது. ஆனால், விண்ணப்பம் வாங்க வந்த பொதுமக்களுக்கு தேர்தல் அதிகாரி, விண்ணப்பம் வழங்க மறுத்ததால் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து தேர்தல் அலுவலர் குருபரன் கூறியது: நீதிமன்ற உத்தரவின்படி பொது பிரிவில் 6 நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்கெனவே, பல உறுப்பினர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் மனு மட்டும் திங்கள்கிழமை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
   மனு தாக்கல் செய்தவர்கள் வாபஸ் வாங்க செவ்வாய்க்கிழமை கடைசி நாள். இத்தேர்தல் நீதிமன்ற உத்தரவின் படியே நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பலர் விண்ணப் பித்திருப்பதால் புதிதாக யாருக்கும் விண்ணப்பம் வழங்கத் தேவையில்லை என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai