சுடச்சுட

  

  ஸ்ரீவிலி.யில் நடைபயிற்சி சென்ற  பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

  By DIN  |   Published on : 12th February 2019 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகையைப் பறித்துச் சென்ற 2 மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் நம்பிநாயுடு தெருவைச் சேர்ந்தவர் ராமசுப்பு. இவர் பொதுப்பணித் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வசந்தா (55). காலையில் நடைப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சக்கரக்குளத் தெரு, கற்பக விநாயகர் கோயில் தெரு, வடக்கு ரத வீதி, மேலரத வீதி, தெற்கு ரதவீதி வழியே சென்றுவிட்டு, திரும்ப வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அதிக வீடுகள் நிறைந்த, மக்கள் நடமாட்டம் மிகுந்த பழைய மின்வாரிய அலுவலகம் அருகே காலை 7.30 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் இவரை பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் வசந்தா அணிந்திருந்த 10 பவுன் தங்க தாலிச் சங்கிலியை அறுத்துக் கொண்டு, அதே வாகனத்தில் தப்பிச் சென்று விட்டனராம். இது குறித்து வசந்தா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai