Enable Javscript for better performance
அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 13th February 2019 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் குடியிருப்பில் புதிய நிழற்குடை அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
       அருப்புக்கோட்டை நகராட்சி 32 ஆவது வார்டில் உள்ள ராமசாமிபுரம் குடியிருப்பு பந்தல்குடி பிரதானச்சாலையில் உள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில், நிழற்குடை இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. அதனால் சேதமடைந்த நிழற்குடையை அகற்றிவிட்டு,  இங்கு புதிய நிழற்குடை அமைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai