சுடச்சுட

    

    சிவகாசி கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கம்

    By DIN  |   Published on : 13th February 2019 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை  ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
      ஒப்புகை சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனையடுத்து இக்கல்லூரியில் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குபதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வருவாய்த்துறையைச் சேர்ந்த கார்த்திக்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பிரேமலதா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai