சுடச்சுட

  

  பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராஜபாளையத்தில் அந்நிறுவன ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
  ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலக வளாகத்தில், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள் சார்பில் வாயிற் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அலுவலர்கள் சங்கத்தில் உள்ள அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை 60 நிரந்தர பணியாளர்கள் கலந்து கொண்டனர். 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3 ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 1.1.17 முதல் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
  மேலும் இதே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ரயில்வே பீடர் சாலையில் தெருமுனைப் பிரசாரமும் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai