சுடச்சுட

    

    ராஜபாளையம் அருகே பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி சாவு

    By DIN  |   Published on : 13th February 2019 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம் அருகே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட மாணவி திங்கள்கிழமை பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
    ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஐயர். இவரது மகள் கலைதேவி (15). மீனாட்சிபுரத்தில் தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். 
    இந்நிலையில் திங்கள்கிழமை அவர் மதியம் உணவு சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai