சுடச்சுட

  

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி பகுதியில்  வெள்ளிக்கிழமை (பிப்.15) மின்விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
   இதுதொடர்பாக மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: படிக்காசுவைத்தான்பட்டி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் இத்துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வன்னியம்பட்டி, வைத்தியலிங்காபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai