ஸ்ரீவிலி.யில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு
By DIN | Published on : 13th February 2019 08:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஸ்ரீவில்லிபுத்தூர் கண்மாய் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், பெரியகுளம் கண்மாய் மயானத்திற்கு பின்புறம் சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் இறந்த மனிதனின் எலும்புக்கூடு கிடப்பது திங்கள்கிழமை இரவு தெரிய வந்தது. இதுகுறித்து பொன்னாங்கண்ணி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.