"எந்த மொழியிலும் திருக்குறள் போன்று சிறப்பான நூல் ஒன்று இல்லை': எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

உலகில் வேறு எந்த மொழியிலும் திருக்குறள் போன்று சிறப்பான நூல் ஒன்று இல்லை என சாகித்ய அகாதமி விருது

உலகில் வேறு எந்த மொழியிலும் திருக்குறள் போன்று சிறப்பான நூல் ஒன்று இல்லை என சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார்.
 விருதுநகர் செந்திக்குமார நாடார் கலைக் கல்லூரியில் திருவள்ளுவர் தின விழா கல்லூரியின் தலைவர் வன்னியானந்தம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியது: திருவள்ளுவரின் குறள்கள் அனைத்தும் நமக்கு தமிழ் கடவுளாக திகழ்ந்து வருகிறது. திருக்குறளில் மருத்துவம், கணினி, வாழ்வியல் முறைகள் உள்பட அனைத்து விஷயங்கள் குறித்து மிக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உலகில் வேறு எந்த மொழியிலும் திருக்குறள் போன்று சிறப்பான நூல் ஒன்று இல்லை. பெண்கள் கல்வி கற்றால் ஒரு குடும்பமே பயன்பெறும். இந்தியாவில் பெண்களுக்கு பிரசவம் பார்த்த முத்துலெட்சுமி ரெட்டி இன்றளவும் பெண்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார். மேலும், முதல் பெண் ஆசிரியரான மகாத்மா பூலே பல தடைகளை கடந்தே ஆசிரியர் பணி மேற்கொண்டார். அகத்தை தூய்மை செய்தால், புறம் தூய்மையாக இருக்கும். நல்லதை செய்யுங்கள் நல்லது நடக்கும். வாக்கு தான் ஒரு மனிதனுக்கு மிக முக்கியம் என திருவள்ளுவர் தெரிவித்துள்ளார் என்றார் அவர். இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெள்ளைச்சாமி நாடார் அறக்கட்டளை புரவலர் குறளரசன் பரிசுகள் வழங்கினார். 
அனைத்துப் போட்டிகளிலும் அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்த மதுரை அம்பிகா கலை கல்லூரிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக கல்லூரி முதல்வர் சுந்தர பாண்டியன் வரவேற்றார். இதில் கல்லூரிச் செயலர் ஜெயக்குமார், போரசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com