ராஜபாளையம் அருகே திருமணத்திற்கு மறுத்த மணமகன் உள்ளிட்டோர் மீது வழக்கு
By DIN | Published On : 14th February 2019 06:56 AM | Last Updated : 14th February 2019 06:56 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பெண்ணை திருமணம் செய்ய மறுத்த மணமகன் மற்றும் அவரது வீட்டார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே சுந்தராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவரது மகள்
ரேவதி (25). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சென்னை கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் சண்முகராஜ் (31). இவருக்கும் ரேவதிக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்று பிப்ரவரி 10 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் சண்முகராஜ் குடும்பத்தினர் திடீரென ரேவதியை திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்தனராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதியின் தந்தை வெள்ளையப்பன் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் சண்முகராஜ், மாடசாமி, கலாவதி, அறிவுமதி, வளர்மதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.