கோவிலாங்குளம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இன்றி பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் நிழற்குடை இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் நிழற்குடை இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
 அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் சுமார் 2,000 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் பிரதானப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. ஏற்கெனவே நிழற்குடை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், அருகில் உள்ள கிராமமான கரிசல்குளத்திற்குச் சொந்தமானதாக இருப்பதால், கோவிலாங்குளம் ஊராட்சி சார்பில் நிழற்குடை அமைக்க இயலவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனால் அதே சமயம் கரிசல்குளம் ஊராட்சியில் போதிய நிதி இல்லை எனக் கூறி நிழற்குடை அமைக்கத் தாமதம் செய்வதாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில் இந்த 2 கிராமங்களிலிருந்தும் பல்வேறு அலுவல்கள் காரணமாக நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் அருப்புக்கோட்டை நகருக்குச் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் போது, வெயில், மழைக்கு ஒதுங்க நிழற்குடையின்றி, கர்ப்பிணிகள், முதியோர், நோயாளிகள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com