முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஆதி யோகி ரத யாத்திரை அருப்புக்கோட்டை வருகை
By DIN | Published On : 28th February 2019 08:00 AM | Last Updated : 28th February 2019 08:00 AM | அ+அ அ- |

கோவை வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்திலிருந்து, சிவராத்திரி விழாவையொட்டி ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் புனித சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆதியோகி ரத யாத்திரை புதன்கிழமை மாலை அருப்புக்கோட்டைக்கு வந்து சேர்ந்தது.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அதன் நிறுவனராகிய ஜக்கி வாசுதேவ் தலைமையில் மார்ச் 4 ஆம் தேதி சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி3 ரதங்கள் அமைக்கப்பட்டு, அதில் ஆதியோகி எனப்படும் சிவன் சிலை அமைக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இந்த 3 ரதங்களும் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்குச் சென்று ஆன்மிக விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டு வருகின்றன.
அதே போல் ஆதியோகி ரதயாத்திரை புதன்கிழமை மாலை அருப்புக்கோட்டைக்கு வந்தது. அப்போது புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் திடலில் தொடங்கிய ஆதியோகி ரத யாத்திரையானது பழைய பேருந்து நிலையம், ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் கோயில், அண்ணா சிலை காய்கறிச் சந்தை, தாதன்குளம் பிள்ளையார் கோயில், சொக்கலிங்கபுரம் வழியாக முக்கியப் பகுதிகளைக் கடந்து ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசொக்கநாதர் கோயில் முன் ரதம் நிறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகனின் ஏற்பாட்டில் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்.