திருத்தங்கலில் பிப்ரவரி 28 மின்தடை
By DIN | Published On : 28th February 2019 08:03 AM | Last Updated : 28th February 2019 08:03 AM | அ+அ அ- |

திருத்தங்கலில் வியாழக்கிழமை (பிப். 28) மின்தடை ஏற்படும் என மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், திருத்தங்கல் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல் நகர், செங்கமலநாச்சியார்புரம்,
கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதா நகர், பூவநாதபுரம், வடபட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி துணை மின்நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.