சாத்தூரில் கேரள முதல்வர் உருவபொம்மை எரிப்பு: பாஜகவினர் போராட்டம்
By DIN | Published On : 04th January 2019 01:22 AM | Last Updated : 04th January 2019 01:22 AM | அ+அ அ- |

சபரிமலையில் பெண்களை தரிசனத்திற்கு அனுமதித்த கேரள முதல்வர் பினராயி விஜயனை கண்டித்து, வியாழக்கிழமை சாத்தூரில் அவரது உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனத்திற்கு பெண்களை அனுமதித்த கேரள அரசைக் கண்டித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாஜக வினர் வியாழக்கிழமை இரவு பிரதான சாலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவ பொம்மையை எரித்தனர். மேலும் கேரள அரசுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர்.
தகவலறிந்து அங்கு வந்த சாத்தூர் நகர் போலீஸார் உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுகுறித்து சாத்தூர் நகர் போலீஸார் உருவ பொம்மை எரித்த பாஜக வினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.