Enable Javscript for better performance
கஞ்சநாயக்கன்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    கஞ்சநாயக்கன்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

    By DIN  |   Published on : 08th January 2019 09:58 AM  |   அ+அ அ-   |    |  

    தங்களது சமுதாயத்துக்குச் சொந்தமான இடத்தை தீயணைப்புத் துறை கையகப்படுத்தியதை மீட்டு, இலவச பட்டா வழங்க வேண்டும் என, கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தினர், மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
         அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் சர்வே எண் 43-3 இல் உள்ள 3 ஏக்கர் 25 சென்ட் இடம் எங்களது உறவின்முறைக்கு பாத்தியப்பட்டதாகும். 
         இந்த இடத்தை, பாலையம்பட்டியைச் சேர்ந்த கட்டப்பெருமாள் என்பவர் எங்களது சமுதாயத்துக்கு தானமாக வழங்கியுள்ளார். எங்களுக்கு பாத்தியப்பட்ட உச்சிமாகாளி அம்மன் கோயில் திருவிழாவின்போது, இந்த இடத்தில் அமைந்துள்ள ஊருணியில் இருந்துதான் தண்ணீரை எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வருகிறோம்.
        இந்நிலையில், இந்த இடத்தை தீயணைப்புத் துறை கையகப்படுத்தியுள்ளதால், எங்களது வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஏற்கெனவே அருப்புக்கோட்டை வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தோம். அதையடுத்து  நடைபெற்ற பேச்சுவார்தையில், அந்த இடத்துக்கு இலவசப் பட்டா வழங்குவதாக தெரிவித்தனர். 
     ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
        எனவே, சம்பந்தப்பட்ட இடத்துக்கு இலவசப் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஜனவரி 10 ஆம் தேதி  அருப்புக்கோட்டையில் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். மேலும், எங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அரசு நிர்வாகத்திடம் ஒப்படைப்போம் என, அதில் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp