சுடச்சுட

  


  அருப்புக்கோட்டை எஸ்பிகே கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
  விழாவுக்கு அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைத் தலைவர் எம்.சுதாகர் தலைமை வகித்தார். மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஆர்.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
  மாணவர்கள் ஒழுக்கத்தையும், மனித நேயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். கடின உழைப்பு, விடாமுயற்சியுடன் வாழ்வில் வெற்றிபெற வேண்டும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றி, பெற்றோரை காப்பதுடன் நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
  அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவர் ஞானசேகரன், உதவித் தலைவர் டாக்டர் தங்கக்குமார், பொருளாளர் துரை மதிவாணன், எஸ்பிகே ஆண்கள் மேல்நிலைப்பள்ளிச் செயலாளர் என்.வி.காசிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  முன்னதாக கல்லூரி முதல்வர் ந.முத்துச்செல்வன் வரவேற்றார். கல்லூரிச் செயலாளர் சங்கரசேகரன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai