மாநில அளவிலான "ஜூடோ' போட்டி: அருப்புக்கோட்டை மாணவர்களுக்கு பதக்கம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டிகளில் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்று சிறப்பிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.ஆனந்தராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தமிழக அரசு கல்வித் துறை சார்பில்  நடைபெறும் குடியரசு தின, பாரதியார் தின விளையாட்டுப் போட்டியின் மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் இரு தினங்களுக்கு முன், திருச்சி மாவட்டம், தொட்டியம், கொங்குநாடு பொறியியல் கல்லூரியின் உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. 
இதில் இப் பள்ளி மாணவர் எம்.கூர்மாவளவன் 19 வயதுக்குள்பட்டோருக்கான 55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கமும், அதே வயதுப்பிரிவில் 71 கிலோ எடைப் பிரிவில் மாணவர் எஸ்.சஞ்சய், வெண்கலப் பதக்கமும் பெற்றனர். மேலும் 17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் எஸ்.தினேஸ் குமார் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், அதே வயதுப் பிரிவில் எம்.யுவராஜ் 71 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இதன் மூலம் இப் பள்ளி மாணவர்கள் மொத்தம் 4 பதக்கங்களுடன் ரொக்கப் பரிசுகள் பெற்று பள்ளிக்கும், விருதுநகர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     
பதக்கம் வென்ற, அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் எம்.செளந்திரபாண்டியன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கணேஷ் குமார், சுரேஷ், சரத் குமார், பிரபு ஆகியோரையும், அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைத் தலைவர் எம்.சுதாகர், பள்ளிச் செயலாளர் என்.வி.காசிமுருகன், பள்ளித் தலைவர் ஜே.ஜெயகணேசன் ஆகியோரும், நிர்வாகிகளும் மேலும் தலைமை ஆசிரியர் ஏ.ஆனந்தராஜன் பள்ளி ஆசிரியர்களும் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com