ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கியதைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 29th January 2019 01:26 AM | Last Updated : 29th January 2019 01:26 AM | அ+அ அ- |

எரிச்சநத்தம், காக்கிவாடன்பட்டியில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணி புரிந்த இரண்டு பேரை பணியிலிருந்து நீக்கியதை கண்டித்து விருதுநகர் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டி மற்றும் எரிச்சநத்தம் பகுதியில் தொலைபேசி நிலையங்கள் உள்ளன.
இதில் திருநாராயணன், மூர்த்தி ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தனர். இதனிடையே தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்த நிலையில், இருவரையும் பணி நீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி பிஎஸ்என்எல்இயு சார்பில் விருதுநகர் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ரவீந்திரன் தலைமை வகித்தார். ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட த்தலைவர் இளமாறன், மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, பிஎஸ்என்எல்இயு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார்உள்பட பலர் கலந்து கொண்டனர்.