சரக்கு வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்
By DIN | Published On : 29th January 2019 01:29 AM | Last Updated : 29th January 2019 01:29 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை சரக்கு வேன் கவிழந்து 20 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டம், திருவேங்கடத்தில் நடக்கும் பருத்தி அறுவடை பணிக்காக ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தில் இருந்து கூலித் தொழிலாளர்கள் ஒரு சரக்கு வேனில் திங்கள்கிழமை சென்றுள்ளனர். கொல்லங் கொண்டான் சாலையில் நிலை தடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 20 பெண்கள் காயம் அடைந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சேத்தூர் ஊரக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.