ஸ்ரீவிலி.யில் எழுத்தாளர் சந்திப்பு படைப்பரங்கம்
By DIN | Published On : 01st July 2019 02:11 AM | Last Updated : 01st July 2019 02:11 AM | அ+அ அ- |

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் 220 ஆவது மாதாந்திர எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கம் தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.
இதற்கு கிளைத் தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் சி.முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.தொடக்கமாக, கிராமியக் கலைஞர்கள் சு.ராமசாமி, தளவை இளங்குமரன் ஆகியோர் பாடல்கள் பாடினர்.
சங்கரன்கோவில் எழுத்தாளர் எ.வேலாயுதசாமிப் பாண்டியன் எழுதிய 'மாமன்னர் பூலித்தேவர் வரலாறு' மற்றும் 'மாமன்னர் பூலித்தேவர் தெய்வீகப் பணி' ஆகிய நூல்கள் குறித்து, தலைமை ஆசிரியர் க.சந்தனக்குமார், பேராசிரியர் க.சிவனேசன், புருஷோத்தமன், நூர்சாகிபுரம் ஆசிரியர் ராமராஜ், கொ.மா.கோதண்டம், என்.நவநீதகிருஷ்ண ராஜா, புலவர் ப.வெள்ளை மற்றும் பூ.அ.துரை ராஜா ஆகியோர் பேசினர். அதைத் தொடர்ந்து, எ.வேலாயுதசாமிப் பாண்டியன் ஏற்புரையாற்றினார். இதில், 'மன்னன் ராஜராஜ சோழனின் காலம்' என்ற தலைப்பில், பேராசிரியர் திருநாவுக்கரசு பேசினார்.
நிகழ்வில், சமூக ஆர்வலர் க.துள்ளுக்குட்டி, கவிஞர் விநாயகமூர்த்தி, அ.முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், எழுத்தாளர் ஜெயமோகன் மீதான தாக்குதலுக்கு கண்டனம், தமிழக சட்டப்பேரவையில் மேலவை அமைத்து எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களை பிரதிநிதியாக தேர்வு செய்திட வேண்டும். அஞ்சல் துறை, வங்கி, காப்பீடு ஆகிய நிறுவனங்களில் படிவங்கள் மற்றும் விபரக் குறிப்புகளைத் தமிழ் மொழியில் அச்சிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி ப.அடைக்கலம் நன்றி கூறினார்.