ஸ்ரீவிலி. நகராட்சியில் குடிநீர் குழாய்கள் செப்பனிடும் பணி
By DIN | Published On : 01st July 2019 02:10 AM | Last Updated : 01st July 2019 02:10 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் குடிநீர் சரியாக வராத பகுதிகளில் குழாய்களை செப்பனிட்டு புதிய குழாய்கள் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதிகளில் சரிவர குடிநீர் செல்லாத பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கையை கேட்டு, அப்பகுதியில் முறையாக குடிநீர் கிடைக்க, புதிய குழாய்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
அதனடிப்படையில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி . எம் நகர், மஞ்சப்பூ தெரு , முதலியார்பட்டித் தெரு ஆகிய இடங்களில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
இதில் சட்டப்பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா, நகராட்சி ஆணையாளர் மாணிக்க அரசி, பொறியாளர் ராமலிங்கம், நிலவள வங்கி தலைவர் த.முத்தையா, நகர வங்கி தலைவர் எஸ் எம் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் மீரா தனலட்சுமி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.