சுடச்சுட

  

  வத்திராயிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து கோட்ட செயற்பொறியாளர் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்திருப்பதாவது: 
  ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்திலுள்ள வலையபட்டி மற்றும் வத்திராயிருப்பு துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
   எனவே அன்றைய தினம் இத்துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் குன்னூர், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், எம்.புதுப்பட்டி, பூவாணி, பிள்ளையார்நத்தம், கிருஷ்ணன்கோவில், அழகாபுரி, மங்கலம், தொட்டியபட்டி, பிளவக்கல் அணை, கான்சாபுரம், கூமாப்பட்டி, வத்திராயிருப்பு, மாத்தூர், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, கோட்டையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இராது என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai